ஒமிக்ரோன் தொற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தற்போது குறைவாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அந்த நிலைமை மாற்றமடையக் கூடும். தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தால் இந்த அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே ஆரம்ப கட்டத்திலேயே தொற்றாளர் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணக் கூடியதாக இருந்தால் இவ்வாறான ஆபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
204 total views, 1 views today