ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (26) ஆரம்பமாகியது.
‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, 5 நாட்கள் தொடரவுள்ளது.
அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகி 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நிறைவடையும்.
5 கட்டங்களின் அடிப்படையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்று 26 ஆம் திகதி கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும்,
27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் ,
28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் ,
29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கலவரையும் ,
30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும்
மே 1 ஆம் திகதி கொழும்பு கெம்பர் பார்க் பகுதி வரையும் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
177 total views, 1 views today