ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் காலமானார்.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி, சில காலம் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகியிருந்ததுடன், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதனை தவிர்த்து வந்திருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 40 நாட்கள் உத்தியோகபூர்வ துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூன்று நாட்கள் மூடப்படும் எனவும் குறித்த அமைச்சு இன்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
150 total views, 1 views today