ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் குறித்த நிறுவனத்தை கொண்டு செல்வதற்காக எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போது 12.5 நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2,675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது
எனினும் இதற்காக லிட்ரோ நிறுவனத்திற்கு 4,662 ரூபா செலவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீண்ட நாட்களாக நாட்டில் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இன்று முற்பகல் முதல் எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.
245 total views, 1 views today