சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும்.

ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3,500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் ஜூ 1 ஆம் திகதி எரிவாயு அடங்கிய கப்பல்கள் வருகை தரவுள்ளன.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் ஆகவே எரிவாயு கொள்வனவிற்காக பொது மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு விநியோக கிடைப்பனவில் தாமதம் ஏற்படுவதை தொடர்ந்து, மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.