Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஎரிபொருள் விநியோக தினத்தில் மாற்றம்

எரிபொருள் விநியோக தினத்தில் மாற்றம்

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, 0,1,2  ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனி கிழமைகளிலும், 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21 முதல் 24 வரையான திகதிகளில் கொழும்பின் பல இடங்களில் QR குறியீட்டு முறைமை பரிசோதிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

QR குறியீட்டு முறைமைக்காக இன்று மாலை 4 மணிவரையில், 20 இலட்சம் பேர் பதிவுசெய்துள்ளதுடன், மேலும் பதிவுகள் தொடர்கின்றன.

இந்த QR குறியீட்டு முறைமையானது, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 326 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular