Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஎரிபொருள் வரிசையில் தொடரும் உயிரிழப்புகள்

எரிபொருள் வரிசையில் தொடரும் உயிரிழப்புகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கிண்ணியா எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவரும்  திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்னறி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தில் கிண்ணியா – முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 150 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular