முச்சக்கரவண்டிக்கு, பெற்றோல் கிடைக்கப்பெறாமையினால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த சிசுவுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இதன்போது, முச்சக்கரவண்டிக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை.
பின்னர், பெற்றோர் குறித்த சிசுவை ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
192 total views, 1 views today