எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், கையிருப்பில் உள்ள எரிபொருள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் (ICTA) இணைந்து இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
www.fuel.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம், பொதுமக்கள், தங்களது மாகாண, மாவட்ட மற்றும் நகரங்களின் விபரங்களை உள்ளீடு செய்து, குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
136 total views, 1 views today