நேற்று நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும்,
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும்,
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும்,
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிபெட்கோ பெற்றோல் விலைக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சியிலும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
220 total views, 1 views today