ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (4) அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சனிக்கிழமை (2) மாலை 6.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள், கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் விசேட வர்த்தமானியொன்று நேற்றையதினம் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.