உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளை அதிகரிக்கப்போவதாக மில்க்ரோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசேகர எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து உள்ளூர் பால்மா உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, அதன் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் விலை அதிகரிப்பு தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
108 total views, 1 views today