15 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கின்னஸ் உலக சாதனையுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், ஐ.பி.எல் நிறைவு விழா நடைபெற்றது.
அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன், மேலும் பல கலைஞர்களும் பங்கேற்றிருந்தனர்.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், உலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில், உலகின் மிகப்பெரிய கிரிக்கட் சீருடையான ஜேர்சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ஜேர்சியானது, 66 மீற்றர் நீளமும், 42 மீற்றர் அகலமும் கொண்டதாகும். 15 ஆவது ஐ.பி.எல் தொடர் என்று குறிப்பிட்டு, 10 அணிகளின் இலட்சினைகளும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதேவேளை, 131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.
117 total views, 1 views today