உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 40 சதவீதம் நிலக்கரியை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கு தேவையான நிலக்கரி ஏற்கனவே, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால், அடுத்த ஆண்டு மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 4 ரூபாவினால் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 காரணமாக 45,000 மில்லியன் ரூபாவுக்கான கட்டண பட்டியல்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
நுகர்வோர் அவற்றை செலுத்துவதில் மேலும் தாமதமாகுவதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.
253 total views, 1 views today