அண்மையில், இலங்கையில் இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, எம்.எம்.சீ. பெர்டினண்டோ, கோப் எனப்படும் பொதுமுயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ மன்னிப்பு கோரியிருந்ததுடன், தமது பதவி விலகல் கடிதத்தையும் வலுசக்தி அமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில் பதவி விலகினார்.
இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அதானி குழுமம், இவ்விடயம் தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.
200 total views, 1 views today