மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்படுமா அல்லது தடைப்படாத என்று மின்பாவனையாளர்கள் எண்ணும் நிலைமை தற்போது காணப்படுகிறது.
பொது மக்களுக்கு தேசிய மின்விநியோக கட்டமைப்பு மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த தவறியமையே தற்போதைய மின் விநியோக பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தொடர்ந்து மின்விநியோகம் சீராக வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
172 total views, 1 views today