உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலை இன்று முதல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அச் சங்கத்தினர்  குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் கொத்துரொட்டி  ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின்  விலை  05  ரூபாவினாலும் அதிகரிப்பட்டுள்ளது.

இதேவேளை, பாண் ஒன்றின் விலை 20 முதல் 30  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.