உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று கூறியது.

2015 மற்றும் 2016 இல் ஐரோப்பாவிற்கு சிரியா நாட்டு அகதிகளின் புலம்பெயர்வினை இது இரண்டு வாரங்களுக்குள் சமன் செய்துள்ளது.

உக்ரேனிலிருந்து வெளியேறிய 2 மில்லியன் பேரில் 50 சதவீதமானோர் குழந்தைகள் / சிறுவர்கள் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாட்களில் சுமார் 500,000 அகதிகள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர், உக்ரேன் குடிமக்களை வெளியேற்றும் பாதைகளில் ஷெல் தாக்குதல் ரஷ்யா நடத்தியதாக  உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.

அநேரம் இறுதியாக சுமார் 4 மில்லியன் மக்கள் உக்ரேனை விட்டு வெளியேறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. இது உக்ரேன் மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்.

பெரும்பாலான உக்ரேன் அகதிகள் போலாந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். 

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இரண்டு வாரங்களுக்குள், ஒரு நாளைக்கு சுமார் 100,000 க்கும் அதிகமான மக்கள் போலந்திற்கு வருகிறார்கள் என்று போலந்து சுகாதார அமைச்சர் ஆடம் நீட்ஜில்ஸ்கி திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.