இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இன்று (02) குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இவ்வருட பாரம்பரிய கொண்டாட்டமானது இலங்கை விமானப்படைத் தளமான கட்டுநாயக்கவில் விமானப்படைத் தளபதியின் பரிசீலனையில் நடைபெறவுள்ளது.
இலங்கை விமானப்படையானது 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி Royal Ceylon Air Force என ஸ்தாபிக்கப்பட்டது.
மேலும் 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறிய போது Royal Ceylon Air Force இலங்கை விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இலங்கை விமானப்படை இதுவரை 18 கட்டளை அதிகாரிகளால் வழிநடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் அனைத்து எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கை விமானப்படையின் பாதுகாவலராக பணியாற்றுவதற்கும் தயாராகவுள்ளது.
221 total views, 1 views today