திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்த சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எமதுச் செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
217 total views, 1 views today