கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.
திவுலப்பிட்டியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவரும், ஜா-எலயை சேர்ந்த 70 வயது பெண் ஒருவரும், மாவில்மடையை சேர்ந்த 42 வயது ஆண் ஒருவரும், நீர்கொழும்பை சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும், மாலபேயை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், 82 வயது பெண் ஒருவரும், பொரளையை சேரந்;த 52 வயதுடைய ஆண் ஒருவரும் மரணித்தனர்.
அத்துடன், நுவரெலியாவை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவரும், முகத்துவாரத்தைச் சேர்ந்த 79 வயது பெண் ஒருவரும், நிட்டம்புவையை சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும், பாணந்துறையை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும், புலத்சிங்களயை சேர்ந்த 77 வயது பெண் ஒருவரும், கம்பஹாவை சேர்ந்த 80 வயது பெண் ஒருவரும் உயிரிந்தனர்.
அவர்களில், 12 பேரின் மரணங்கள் கொவிட் நியூமோனியாவினால் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
110 total views, 1 views today