ஆசிரியர் தினம் இலங்கையில் இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் சிபாரிசுக்கமைய 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும், இலங்கையில் ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்றைய தினம், ஆசிரியர் அதிபர்களின் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் 87 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், இன்று நாடுதழுவிய ரீதியில், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
154 total views, 1 views today