நாட்டில் எஞ்சியுள்ள 85 எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sopita Thero) தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இந்நாட்டின் எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருகோணமலைக்குச் சென்று எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவே.
எஞ்சியுள்ள 85 எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டின் சொத்துக்களை இவ்வாறு கொள்ளை விலையில் விற்பனை செய்வதற்கு தற்போதைய ஆட்சியாளருக்கு என்ன உரிமையுள்ளது?
இவ்வாறான நடவடிக்கைகள் பெரியதொரு பாவச் செயல், தூர நோக்கற்ற எதேச்சதிகார செயலாகும்.
தேசிய சொத்துக்கள் கொள்ளையிடப்படுவதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அரசாங்கம் இந்த விடயங்களைச் செவி சாய்ப்பதில்லை.
எதிர்காலத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன்.
சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவுக்கு நேர்ந்த நிலைமையே இலங்கைக்கும் நேரிடும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
150 total views, 1 views today