இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசி்ய பொருட்களை வழங்கி உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளி்த்தன. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய பிரதமர் மோதி்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”இலங்கை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்க உரிய அனுமதிகளை வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென.” வலியுறுத்தி்யுள்ளார்.
109 total views, 1 views today