இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

ராகம வைத்திய பீட மாணவர்  தங்கு விடுதிக்குள் அத்து மீறி நடத்தப்பட்ட தாக்குதலுடன், அருந்திக பெர்ணான்டோவின்  சகாக்கள் தொடர்புபட்டுள்ளதன் பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.

தாக்குதலுக்கு வந்தவர்களில் ஒருவர் வாகனத்துடன் மாணவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில், அவ்வாரு பிடிபட்டவர் அருந்திக பெர்ணான்டோவின் தனிப்பட்ட பணிக் குழுவின்  உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட  வாகனமும் அருந்திக பெர்ணான்டோவின் இராஜாங்க அமைச்சின் கீழ்  பயன்படுத்தப்பட்ட வாகனம் என தெரியவந்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே அருந்திக பெர்ணான்டோவை உடனடியாக பதவியிலிருந்து விலக ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.