விவசாய இராஜாங்க அமைச்சராக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சஷீந்திர ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயாதீனமாக பாராளுமன்றில் இயங்குவதாக பகிரங்கமாக அறிவித்த அடுத்த கணமே ஜனாதிபதியுடன் சந்திப்பையும் ஏற்படுத்தி இருந்தனர்.
இவ்வாறு அரசியல் சந்தர்ப்பம் பார்த்து அதிகாரங்களையும் சுகபோகங்களையும் அடையும் எண்ணத்துடன் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டங்களை அடகு வைக்கும் விதமாக பிரதான அரசியல் காட்சிகள் திரை மறைவில் செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
314 total views, 1 views today