Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇரட்டை முகங்களை மக்கள் அறிந்துகொண்டனர்

இரட்டை முகங்களை மக்கள் அறிந்துகொண்டனர்

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்களிப்பதற்காக பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் குறித்த வாக்குசீட்டினை பகிரங்கமாக சபையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வாக்களிப்பவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதற்கு பொறுப்பு எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தான் வாக்களித்த வாக்குசீட்டை காண்பித்தபோது, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கைப்பேசியில் படம் பிடித்தனர்.

உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு, புகைப்படம் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என எச்சரித்த சபாநாயகர் இரகசியத் தன்மை பற்றி பேசிக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தை விமர்சிப்பது போன்று மாயாஜாலம் காட்டிக்கொள்ளும் அரசாங்கத்தின் பங்காளிகளான சுயாதீனமாக இயங்கும் கட்சிகளின் இரட்டை முகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் நல்லவர்கள் போன்று மக்களுக்கு போலி வேடம் போடும் சுயாதீன குழு முற்றிலும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நேர்த்தியாக செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் எனும் போர்வையில் மொட்டுக்கட்சியின் உறுப்பினர்களே சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு செயற்படுவார்கள் எனவும், மக்களின் போராட்டம் வெறும் கட்பனையாகவே கலைந்துவிடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 244 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular