Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇமாலய விலையில் மண்ணெண்ணெய்

இமாலய விலையில் மண்ணெண்ணெய்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு, அதற்கு இணையாக நேரடி நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்குரிய ஒரு காரணியாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, பழைய விலையிலிருந்து 253 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகூடிய அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 196 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular