Thursday, July 7, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று (09) மதியம் 12:12 மணிக்கு சிலாபம், மஹாகெலிய, வெலிவிட்ட (மாத்தளை மாவட்டம்), புல்லுமலை, கல்குடா மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 198 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular