வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
226 total views, 1 views today