நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் 7 1/2 மணிநேரம் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

E,F இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 7 1⁄2 மணித்தியாலங்களும்:

– மு.ப. 8.00 முதல் பி.ப. 6.00 மணி வரை 5 மணி நேரம்

– மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரை 2 ½ மணி நேரம்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்களும்:

– மு.ப. 9.00 முதல்  பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்

– பி.ப. 5.00 முதல் இரவு 9.00 வரை ஒரு மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு தொடர்பான அட்டவணையை பார்வையிட இங்கே அழுத்தவும்