வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இறக்குமதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பரிந்துரைக்கமைய இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மூன்று வகையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவித்தலில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார். அதன்படி,
1) நடைமுறைக்கமையஇ சில தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும்.
2) நடைமுறைக்கமைய சில தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களை இறக்கமதி செய்ய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடைமுறைக்கமைய சில தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கவும்இ அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளது.
இதன்படி குறித்த 367 பொருட்களை இறக்குமதி செய்ய நேரடியாகவும் முறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
370 total views, 1 views today