இலங்கையில் மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
170 total views, 1 views today