இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தும் இணைந்து கொண்டுள்ளார்.

பேராயருடன் பல அருட்த்ந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டின் குடிமக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இன்று (5) பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.