ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 50 பேர் உயிரிழந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் உள்ளது.
ரமழான் மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை (29)வழிபாட்டு தலத்தில் அதிக அளவிலானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தனர்.
குறித்த வழிபாட்டுத் தலத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் ஷியா – சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
234 total views, 1 views today