ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறார்கள் மற்றும் பெண்கள் உட்பட ஐந்து மில்லியன் பேர் போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதாக துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மீட்புக் குழு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஹனாபி இதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் இனாமுல்லா சமங்கானி  இது குறித்து மேலும் கூறுகையில், ஆப்கானிஸ்தான் விவசாயிகளுக்கு மாற்று வழியை வழங்க சர்வதேச சமூகம் உதவினால், ஆப்கானிஸ்தான் முழுவதும் போதைப் பொருட்களை அகற்றுவதில் உறுதியுடன் செயற்படுவதாக  தெரிவித்துள்ளது.

பின்தங்கிய பகுதிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்குவது முன்னுரிமை என்றும், இது தொடர்பாக நடைமுறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மீட்பு குழு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் பெண்களின் நிதி தன்னிறைவுக்காகவும் ஆர்வமாக செயற்பட வேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

போதைக்கு அடிமையானவர்கள் தற்போது தெருக்களில் உள்ளனர்.

தலிபான்கள் இதுவரை சிறு போதைப்பொருள் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்,ஆனால் பெரிய வியாபாரிகளுக்கு பெரும்பாலும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.