ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக   42 பேர் உயிரிழந்துள்ளதோடு, 76 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதோடு, 76 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் (IEA) அனர்த்த முகாமைத்துவம் மத்திய நிலையத்தின் விவகாரங்களுக்கான மாநில அமைச்சகம்   தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த 20 நாட்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக வெளியுறவு  அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கியுள்ளதுடன், மேலும் அனர்த்தங்கள் ஏற்படுவதை  தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவித்துள்ளதுள்ளதோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன்றது.

மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களிலும் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,000 வீடுகள்  சேதமடைந்துள்ளன.

உறைபனி குளிர்காலம் மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஆகியவை ஆப்கானிஸ்தானில்  வேலையின்மை, பட்டினி மற்றும் வறட்சி போன்ற மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.