நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் உறுதியான தீர்மானத்தை முன்வைக்கும்.
மக்கள் எதிர்பார்க்கு வகையிலான அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படாது.
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது இடைக்கால அரசாங்கம் உருவாக்கத்திற்காக துடிப்புடன் செயற்படுகிறார்கள் என நிதி நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிகையில்,
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை.
எரிபொருள்,எரிவாயு உட்பட மின்விநியோக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறோம்.
நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான பொருளாதார நெருக்கடியினை சாதகமாக கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு முழுமையாக உள்ளது.அமைதி வழியிலான மக்களின் போராட்டம் இறுதியில் அரசியல் போராட்டமாக மாற்றமடைந்து விடுகிறது.
மிரிஹான போராட்டம் இறுதியில் தீவிரமடைவதற்கு அரசியல் அழுத்தம் பிரதான பங்கு வகித்துள்ளது.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்கும்.
அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமே தவிர ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பாது.
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க துடிப்புடன் செயற்படுகிறார்கள்.
இவ்வாறானவர்களின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
251 total views, 1 views today