Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரச வங்கியில் 68.3 மில்லியன் ரூபா மோசடி

அரச வங்கியில் 68.3 மில்லியன் ரூபா மோசடி

அரச வங்கியொன்றில் இருந்து 68.3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் வங்கி அதிகாரியொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடவத்தை அரச வங்கியில் 48 போலி கடன் ஆவணங்களை சமர்ப்பித்து 68,340,000 ரூபா நிதியை இவ்வாறு மோசடி செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த மோசடிக்கு உதவியதற்காக தற்போது கைதான பெண், சம்பந்தப்பட்ட வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொது முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்பதுடன் குறித்த நபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 229 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular