சுகாதாரத் துறை மற்றும் வைத்தியர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அரச சேவையில் முறையான சம்பளக் கட்டமைப்பைப் பேண வேண்டியதன் அவசியத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் ஊழியர் கட்டமைப்பிற்குள் சம்பளத்தை நிர்ணயிப்பது தொடர்பிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமைச்சரவை பத்திரங்களின் ஊடாக சம்பள திருத்தங்களை மேற்கொள்ளாமல், சம்பள கொள்கைக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதுகலைப் பட்டதாரி மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், வைத்தியர்களை நியமிக்கும் விசேட நடைமுறைகளை உருவாக்குவதற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
152 total views, 1 views today