Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரசிலிருந்து விலக தயார்

அரசிலிருந்து விலக தயார்

தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்து.

ஏழ்மையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனையை விரைவாக செயற்படுத்துவது அவசியமாகும்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வுகாண வேண்டும்.
மக்களின் தற்போதைய நிலைமையை சுதந்திர கட்சி உணர்வுபூர்வமாக விளங்கிக்கொள்கிறது.

மக்களின் அழுத்தங்களில் இருந்து அரசியல் கட்சிகளினால் இனி விடுபட முடியாது.

முன்வைக்கப்பட்ட யோசனைகளை இவ்வார காலத்திற்குள் செயற்படுத்தாவிடின் அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகி பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 14 உறுப்பினர்களும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவோம் என்பதை வலியுறுத்தி சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

 176 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular