Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரசியலுக்கு விடைகொடுப்பேன்

அரசியலுக்கு விடைகொடுப்பேன்

பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தில் இணையுமாறு, அழைப்புகள் தொடர்ந்தால் அரசியலில் இருந்து விலகப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை காவல்துறையின் காவலில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே  சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்போது தொழிற்சங்கவாதிகள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்றவர்களை வேட்டையாடுகிறது.

அவர்கள் பல கட்சி அரசாங்கத்தில்  இணையுமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சன்மானங்களை வழங்குவதாக பேரம் பேசிவருகின்றனர்.

இதுபோன்ற நச்சரிப்புகள் தொடர்ந்தால் தாம் அரசியலில் இருந்து விலக நேரிடும் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜோசப் ஸ்டாலின் போன்ற போராட்டக்காரர்கள் சிறையில் இருக்கும்போது அண்மைக்கால வன்முறைச் செயற்பாடுகளின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகின்றார் என்று சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் போன்றவர்கள் கைது செய்யப்பட்டால் இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

 317 total views,  5 views today

RELATED ARTICLES

Most Popular