இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கி இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த சந்தேகம் இருக்கிறது.
இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தாம் பதவி விலகுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
180 total views, 1 views today