வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு கொள்கலன்கள் விநியோகிகப்படுவதாகவும் , லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
நேற்றுமுன்தினம் (14) தரையிறக்கப்பட்ட எரிவாயு, தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமென லிட்ரோ கேஸ் நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை , வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நேற்றும் (15) மற்றும் இன்றும் (16) லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
115 total views, 1 views today