உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் இலங்கை அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் ராஜபக்ச குடும்பத்தில் உள்ள நிருபமா ராஜபக்ச தொடர்பில் குறித்த ஆவணத்தில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவலே ஆகும்.
இந்த நிலையில் நிருபமா(nirupama rajapaksha) முன்னாள் பிரதி அமைச்சராவார். பிரதி அமைச்சரிடம் அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara)கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வரையிலும் நிருபமாவின் கணவருக்கு விஐபி சலுகைகள் வழங்கப் படுகின்றன. இவை எந்த பின்னணியில் வழங்கப்படுகின்றது என்பது தெரியவில்லை பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிருபமா ராஜபக்ஷவிடம் 35,000,000,000 ரூபா சொத்துக்கள் உள்ளதென நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்து இவற்றினை பொய் என கூறுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
237 total views, 1 views today