ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களுக்கு முதற்தடவையாக உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை காலம் ஆசிரியர்களுக்கு உத்தியோகப்பூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால், தற்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, 24 வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்த்து வைக்குமாறு கோரி நாடளாவிய ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை ஆசிரியர் சங்கம் ஆசிரியர் தினம் இன்று (06) எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
188 total views, 1 views today