டொலரின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் மில்கோ நிறுவனத்தின் எந்த உற்பத்திகளினதும் விலை அதிகரிக்கப்படமாட்டாது.

அத்துடன் பால் மா உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் ஆரம்பம் முதல் பால்மா விநியோகிக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்தார்.

மில்கோ நிறுவனம் பால்மா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அதன் விலை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.