தமது வீட்டை முற்றுகையிட வந்தால் தாக்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் வீடு முற்றுகையிடப்பட்ட முறையில் யாரேனும் தனது வீட்டை சோதனையிட வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவேன் அனவும் அவர் கூறினார்.
அத்துடன் அடிபட்டால் தாக்குவதே தமது கட்சியின் கொள்கை எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
345 total views, 1 views today