Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅஞ்சல் அலுவலகங்கள் 3 நாட்களுக்கு இயங்கும்

அஞ்சல் அலுவலகங்கள் 3 நாட்களுக்கு இயங்கும்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் திறக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பொதுச் சேவைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களத்தின் இந்த திடீர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அவசர பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அஞ்சல் அலுவலகங்களை திறப்பதால், சனிக்கிழமை கொடுப்பனவு உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை அஞ்சல் நிர்வாகம் குறைத்து வருவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

 107 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular